சினிமா

‘கிங்டம்’ படத்தின் அசத்தலான அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

‘கிங்டம்’ படத்தின் அசத்தலான அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்
Kingdom Movie Trailer Update
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவரின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இதையடுத்து இவர் நடித்த ’தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில், தற்போது இவர் ‘ஜெர்ஸி’ படத்தின் இயக்குநர் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் ‘கிங்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவு பெற்று வெளியாக தயார் நிலையில் உள்ளது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள 'கிங்டம்' திரைப்படம், இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.

இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்த நிலையில், படம் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, ‘கிங்டம்’ படம் ஜூலை 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் ட்ரெய்லர் அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில் படக்குழுவினரை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், படக்குழு ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேடை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.