இந்த நிலையில், தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான ‘குபேரா’ படம் கலவையான விமர்சனங்களைபெற்றது. ஆனால் படத்தில் தனுஷின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டது. இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன், பிரபல பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப்பும் நடித்துள்ளார். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கடைக்கோடி யாசகர் ஒருவருக்கும் பணக்காரர் ஒருவருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் மையக்கதையாகும். இந்த படம் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் தெலுங்கில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக படம் வெளியான அன்று தெலுங்கில் ரூ.10 கோடியும் தமிழில் ரூ.5 கோடியும் வசூல் செய்துள்ளது.
இந்த படம் வெளியான முதல் 4 நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டது. அதனையடுத்து, இந்த படம் ரூ.136 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘குபேரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் வரும் 18 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
a simple man, and the not so simple journey of his redemption arc ✨#KuberaaOnPrime, July 18@dhanushkraja KING @iamnagarjuna @iamRashmika @jimSarbh @sekharkammula @ThisIsDSP @mynameisraahul @AdityaMusic @KuberaaTheMovie @SVCLLP @amigoscreation pic.twitter.com/lVCjhi6YO4
— prime video IN (@PrimeVideoIN) July 11, 2025