இந்தியா - பாக். போர் பதற்றம்

பாக்.தாக்குதலை மீண்டும் முறியடித்த இந்தியா...இன்றும் இருளில் மூழ்கிய முக்கிய நகரங்கள்

ஜம்மு காஷ்மீரில் சம்பா பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவம் வழிமறித்து அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது

 பாக்.தாக்குதலை மீண்டும் முறியடித்த இந்தியா...இன்றும் இருளில் மூழ்கிய முக்கிய நகரங்கள்
ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை இந்தியா முறியடித்தது
ட்ரோன் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.இதில் 5 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய கட்டடங்கள் சேதம் அடைந்தது.


மின்சாரம் துண்டிப்பு

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இருப்பினும் காஷ்மீர் சில கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இன்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று நடந்ததை போல் இன்றும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுவதால் தெருவிளக்குகள், வீட்டு மின் விளக்குகள் ஆகிவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஜம்முவில் மருந்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

தாக்குதல் முறியடிப்பு

இந்த நிலையில், நான் இருக்கும் இடத்தில் இடைவிடாது குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்கின்றன ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளனர்.அதேபோல் ஜம்மு காஷ்மீரில் சம்பா பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவம் வழிமறித்து அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் ராணுவத்தினர் அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.