ஐபிஎல் 2025

DC vs LSG: அதிரடி காட்டிய கே.எல் ராகுல்.. லக்னோவை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

DC vs LSG: அதிரடி காட்டிய கே.எல் ராகுல்.. லக்னோவை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்!
அதிரடி காட்டிய கே.எல் ராகுல்.. லக்னோவை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்!
ஐ.பி.எல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பவுலிங் தேர்வு செய்த நிலையில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

லக்னோ அணியின் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடி காட்டினர். மார்க்ரம் 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டப்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில், முகேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 9 ரன்களிலும், அப்துல் சமாத் 2 ரன்களிலும், டேவிட் மில்லர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அயூஷ் பதோனி 36 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், டக் அவுட் ஆகி மீண்டும் அதிர்ச்சியளித்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை சேர்த்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் போரல் மற்றும் கருண் நாயர் பேட்டிங்கை தங்களது தொடங்கினர். மார்க்ரம் பந்து வீச்சில் கருண்நாயர் 15 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கே.எல். ராகுல் களமிறங்கினார். அபிஷேக் மற்றும் கே.எல். ராகுல் ஜோடி அதிரடியாக விளையாடினர். அபிஷேக் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில், டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் அக்சர் படேல் களமிறங்கி 20 ரன்களில் 34 ரன்களுடனும், கே.எல். ராகுல் 42 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் லக்னோ அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன் எடுத்த நிலையில், இந்த போட்டியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.