டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (மே20) நடைபெற்ற 60வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். டெவான் கான்வே 10 ரன்களில் ஆட்டமிழந்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய உர்வில் படேல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து ஆயுஷ் மாத்ரேவுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளை விளாசிய நிலையில், அடுத்து களமிறங்கிய டெவால்ட் ப்ரேவிஸ் 25 பந்துகளில், 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 42 ரன்களை விளாசிய நிலையில், ஆகாஷ் மாத்வால் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஷிவம் தூபே 39 ரன்களும், தோனி 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அன்சுல் காம்போஜ் 5 ரன்னிலும், நூர் அகமது 2 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 187 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் களமிறங்கினர். ஜெய்வால் 36 ரன்களும், வைபவ் 57 ரனகளிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். ரியான் பராக் 3 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், துருவ் ஜூரல் 31 ரன்னிலும், ஷிம்ரோன் ஹெட்மயர் 12 ரன்னிலும் களத்தில் இருந்த நிலையில், ராஜஸ்தான் அணி 17 புள்ளி 4 ஓவரிலேயே 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 5 முறை சாம்பியன் பட்டங்களை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன் முறையாக ஒரு சீசனில் 10-வது தோல்வியை சந்தித்துள்ளது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலிலும், கடைசி உள்ளது.