ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ள நிலையில், நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக மாறிவரும் சூழலில், தற்போது, இனி நகைக்கடன் வாங்குவதிலும் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வெளியிட்டுள்ள தங்க கடன் தொடர்பான முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் வழங்கல் நடைமுறைகளை ஒரே மாதிரியாக்கும் நோக்கில் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகைக்கடனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்க நகைகளை அடமானம் வைப்போர் தாங்கள், வைக்கும் நகைக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்ற ஆதாரத்தை வங்கியில் அளிக்க வேண்டும்.
அடமானம் தங்க நகையின் தூய்மைத்தன்மை மற்றும் நகை சம்பந்தமான அனைத்து தகவல்கள் குறித்தும் வங்கியிடம் சான்றிதழை கட்டாயம் பெற வேண்டும். மேலும், அதன் நகலை, அந்த நிறுவனமும் வைத்திருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதில் கடன் வாங்குபவர் மற்றும் கடன் கொடுப்பவர் இருவரும் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்.
தங்க நகைகள் இனி 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும் என்றும், தனி நபர்கள் இனி ஒரு கிலோ வரை மட்டுமே நகை அடகு வைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடன் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு, 7 வேலை நாட்களுக்குள் தங்கத்தை மீள்பெற முடியாவிட்டால், கடன் வழங்குநர், கடன் பெறுவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 5,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ள நகையின் வகைகளுக்கு மட்டுமே இனி வங்கிகளில் கடன் வழங்கப்படும் என்றும், வங்கிகளில் இனிவரும் காலங்களில் வெள்ளி நகைகளுக்கும் அடமானக் கடன் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருமுறை தங்க நகைகளை அடமானம் வைத்தவர்கள், அந்த வருடத்திற்குள் முழுதொகையையும் செலுத்திய பிறகு, மீண்டும் நகையை அடகு வைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
LTV விகிதம் 30 நாட்களுக்கு மேல் மீறப்பட்டால், அந்தக் கடன் தொகைக்கு கூடுதல் 1% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ரிசர்வ வங்கி வெளியிட்டுள்ள விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு சாமானிய மக்கள் வங்கிகளில் நகைக்கடன் வாங்க முடியாத நிலைக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.