கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் முதுநிலை (Postgraduate) இலக்கிய பாடத்திட்டத்தில், பிரபல ராப் பாடகர் வேடன் எழுதிய “நான் வாழும் பூமி” என்ற பாடல் சமீபத்தில் சேர்க்கப்பட்டது. இந்த பாடல் சமூக அத்துமீறல்கள், வன்முறை, மற்றும் மனித உரிமைகள் குறித்து பேசுவதால் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த பாடலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பல்கலைக்கழகத்துக்கு வலியுறுத்தியுள்ளார். பாடலின் உள்ளடக்கம் மற்றும் அதன் பொருத்தம் குறித்து பல்வேறு தரப்புகளில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சிலர் இந்த பாடல் மாணவர்களுக்கு தவறான கருத்தை ஊட்டும் என்றும், சிலர் இது சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிக்கும் என்றும் வாதிடுகின்றனர்.
“நான் வாழும் பூமி” பாடல் சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. வேடன் தனது அனுபவங்களையும், சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களையும் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். இதனாலேயே பாடல் பல மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாடலை நீக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் பாடலின் உள்ளடக்கம் கல்வி நிலையத்தில் பொருத்தமற்றது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வைரலாகி வரும் நிலையில், கோழிக்கோடு பல்கலைக்கழகம் பாடலின் சேர்க்கை குறித்து மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படும், நிலையில், கல்வி மற்றும் சமூக சிந்தனையிலான சுதந்திரம், மற்றும் பாடத்திட்டத்தின் தரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..