ஸ்ரீநகர் விமான நிலையத்தில், அதிக எடை கொண்ட லக்கேஜ் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், ராணுவ அதிகாரி ஒருவர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நான்கு ஊழியர்களைச் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் டெல்லி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிப்பதற்காக, ராணுவ அதிகாரி கர்னல் சிங் என்பவர் செக் இன் பகுதியில் காத்திருந்தார். அப்போது, அவரிடம் இருந்த பயணப் பையின் எடை 16 கிலோவாக இருந்தது. இது விமான நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட எடை அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, அதிக எடைக்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் அவரிடம் தெரிவித்தனர். ஆனால், ராணுவ அதிகாரி கட்டணம் செலுத்த மறுத்ததுடன், ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் அங்கிருந்த ஒரு உலோகத் தகட்டைக் கொண்டு நான்கு ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஊழியர்களுக்கு முதுகுத்தண்டு முறிவு, முகத்தில் காயங்கள் மற்றும் வாய், மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் போன்ற கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மற்ற அதிகாரிகள் அங்கு வந்து ராணுவ அதிகாரியைக் கட்டுப்படுத்தியதோடு, காயமடைந்த ஊழியர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஸ்ரீநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிமீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது. மேலும், விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி, அவரை விமானத்தில் பயணிக்கத் தடை செய்யும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ள நிலையில், ராணுவ அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.