இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரரான, நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் என்ற கவுரவப் பதவியை இந்திய ராணுவம் வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பை ராணுவ விவகாரத் துறையின் இணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜி.எஸ்.சவுத்ரி வெளியிட்டார்.
நீரஜ் சோப்ரா 2016 இல் இந்திய ராணுவத்தில் நைப் சுபேதார் என்ற பதவியுடன் ஜூனியர் அதிகாரியாக சேர்ந்தார். இவரது ஈட்டி எறிதல் திறமையால் இந்தியாவிற்கு சர்வதேச அளவில் புகழும் அங்கீகாரமும் கிடைத்தது. தொடர்ந்து, டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை பெற்று வரலாற்று சாதனைப் படைத்தார். நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு 2018 ஆம் ஆண்டு, அர்ஜுனா விருதும், 2021 இல் விசிஷ்ட சேவா பதக்கமும் வழங்கப்பட்ட நிலையில், சுபேதாராகவும் பதவி உயர்வு பெற்றார்,
தற்பொது, நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு பெற்றதுடன், அவரது சம்பளமும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவரது சம்பளம் ரூ.1,21,200 முதல் ரூ.2,12,400 வரை உயரும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து, இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களின் விளையாட்டு செயல்திறன் மூலம் செய்யும் சாதனைகளுக்கு, இந்திய இராணுவத்தில் சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்படுகிறது. இந்த வரிசையில், தற்போது, இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் இணைந்துள்ளார். முதல் முதலில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நாட்டின் முதல் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து, துப்பாக்கி சுடும் வீரர் விஜய் குமார் 2012 இல் வெள்ளிப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து கௌரவ கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி தலைமையில், டி20 உலகக் கோப்பை (2007) மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை (2011) கிரிக்கெட் தொடர்களிலும் கோப்பையை வென்றது. இந்த போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 2011 ஆம் ஆண்டு லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.