மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா பெயரிலான ஸ்டாண்டை மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். மும்பை மைதானத்தில் இதற்கு முன்னர் சரத் பவார், அஜித் வடேகர் ஆகியோரது பெயரிலும் ஸ்டாண்ட் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மே 16 ) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் பெயரில் புதிய ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், ரோகித் ஷர்மாவின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) தனது 86வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், வான்கடே மைதானத்தில் உள்ள திவேச்சா பெவிலியன் லெவல் 3 பகுதியை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரில் "ரோகித் சர்மா ஸ்டாண்ட்" என பெயரிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மா, 2024ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை மற்றும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்துள்ளார். அவரை போற்றும் விதமாக இத்தகைய கவுரவுத்தை மும்பை கிரிக்கெட் சங்கத்தினர் வழங்கியுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர் என்ற பெருமையும் ரோகித்தையே சேரும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் அஜித் வாடேக்கர் மற்றும் ஷரத் பவரின் பெயர்களிலும் வான்கடே மைதானத்தில் ஸ்டாண்ட் உள்ள நிலையில், திவேச்சா பெவிலியன் லெவல் 3 பகுதியை ரோகித் சர்மாவின் பெயரில் மும்பை கிரிக்கெட் சங்கம் மாற்றியமைத்துள்ளது. இதன் புதிய ஸ்டாண்ட், ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணத்தின் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் அவரது சாதனைகளை நினைவுகூரும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் புகழ் நிலைத்திருக்கும் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறியாதவது, "சிறுவயதில் நான் வான்கடே மைதானத்தின் வெளியே நின்று, மும்பை ரஞ்சி அணியின் பயிற்சிகளைப் பார்த்தேன். இப்போது என் பெயரில் ஒரு ஸ்டாண்ட் என்பது மிகப்பெரிய கௌரவமாகும்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.