கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் வருகையை முன்னிட்டு கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 'G.O.A.T. டூர்' நிகழ்வு, அவரைப் பார்க்க வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை வாங்கியிருந்த ரசிகர்கள், மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாத ஆத்திரத்தில் மைதானத்தில் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை வீசினர்.
ரசிகர்கள் ஏமாற்றம்
இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்திருக்கும் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, கோட் டூர் ஆஃப் இந்தியா 2025 என்ற பயண திட்டத்தின்படி, கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு இன்று (டிச. 13) காலை 11.15 மணியளவில் சென்றார்.
இந்த நிலையில், மைதானம் வந்தடைந்த மெஸ்ஸி, சிறிதுநேரத்திலேயே அங்கிருந்து சென்று விட்டதாகவும், அவரைச் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை என்றும் ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர். மேலும், அவரை தலைவர்களும், நடிகர்களும் சூழ்ந்திருந்ததாகவும், தங்களால் பார்க்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆத்திரம் அடைந்த ரசிகர்கள்
மெஸ்ஸி வெளியேறிய பிறகு, ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை வீசினர். பல ரசிகர்கள் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த பந்தல்களைச் சேதப்படுத்தினர். இதனால் மைதானமே கலவரமாக கட்சி அளித்தது.

LIVE 24 X 7