ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கொழும்புவில் இன்று தொடங்கியது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நெதர்லாந்தின் தடுமாற்றமும் போராட்டமும்
முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும், கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ் மட்டும் நிதானமாக விளையாடி 37 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தானின் சரிவும் பஹீம் அஷரீப்பின் அதிரடியும்
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சிகரமாக அமைந்தது. நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருப்பினும், ஒருபுறம் சாஹிப்சதா பர்ஹான் நிலைத்து நின்று ஆடி 47 ரன்களும், அவருக்குத் துணையாக சைம் ஆயுப் 24 ரன்களும் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர்.
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதில் பெரும் இழுபறி நீடித்தது. அப்போது களமிறங்கிய பஹீம் அஷரீப், அதிரடியாக விளையாடி ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதியில் 19.3 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

LIVE 24 X 7