இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்புவில் நடைபெற வேண்டிய இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கதேச அணி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை என பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானில் ஐசிசி நிர்வாகிகள் ஆலோசனை
இந்த விவகாரத்தைச் சுமூகமாக முடிக்க ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் பிரதிநிதி முபஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவரும் அமைச்சருமான மொஹ்சின் நக்வியைச் சந்தித்துப் பேசினர். இந்த ஆலோசனையின் போது, இந்தியாவுடன் விளையாடத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று நிபந்தனைகள்
தொடர் வருவாயில் அதிக பங்கு, இந்தியாவுடன் இருதரப்பு போட்டிகளை தொடங்க ஐசிசியின் உதவி மற்றும் பாகிஸ்தானுடன் விளையாடும்போது இந்திய வீரர்கள் மரபுபடி கைக்குலுக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவரும், தங்கள் நாட்டுக்கு ஐசிசி தொடர் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அடுத்தகட்ட முடிவு என்ன?
தற்போது பாகிஸ்தானின் கோரிக்கை தொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்படி அறிவிக்கவுள்ளது.

LIVE 24 X 7