தமிழ்நாடு

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? போக்சோவில் கைதான ஆட்டோ டிரைவர்

ஆட்டோவில் தொடர்ந்து பயணம் செய்து வந்த மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? போக்சோவில் கைதான ஆட்டோ டிரைவர்
Auto driver arrested under POCSO act
தஞ்சாவூரில் தனது ஆட்டோவில் பயணம் செய்த 17 வயது மாணவியை புகைப்படம் எடுத்து தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி பாலியல் சீண்டல் செய்து மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட ஒரு கிராமப் பகுதியை சேர்ந்தவர் எம்.சுரேஷ் குமார் (32). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் 17 வயது மாணவி ஒருவர் நீட் தேர்விற்கான பயிற்சி நிலையத்திற்கு கடந்த ஏப்ரல் 2024 முதல் தொடர்ந்து சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ்குமார் அந்த 17 வயது மாணவியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த 17 வயது மாணவியை வற்புறுத்தி பாலியல் சீண்டல் செய்து மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கடந்த 12-ம் தேதி திங்கட்கிழமை தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

Read also: நடிகைகளுடன் புகைப்படம்.. பெண்களை குறி வைத்து ரூ.27 லட்சம் மோசடி செய்த பல் டாக்டர் கைது

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டதில் சுரேஷ்குமார் அந்த மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.