சென்னை மத்திய குற்றப்பிரிவில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்த சந்திரமோகன் (46) என்பவர், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலையா?
பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சந்திரமோகன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் போலி பாஸ்போர்ட் விசாரணைப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது மனைவி ஜெனிபருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் சந்திரமோகனின் மனைவி தனது பிள்ளைகளுடன் சொந்த ஊரான கேரளாவுக்குச் சென்ற நிலையில், சந்திரமோகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று இரவு, அவரது மனைவி ஜெனிபர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜெனிபர், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் தகவல் கொடுத்துள்ளார்.
பக்கத்து வீட்டார் சென்று பார்த்தபோது, கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சந்திரமோகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பரங்கிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சினை காரணமாகவே சந்திரமோகன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
சந்திரமோகனின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சென்னைக்கு வந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னரே, குடும்பப் பிரச்சினையா, பணிச்சுமையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.