தமிழ்நாடு

OPERATION SINDOOR- இந்திய ராணுவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணைநிற்பதாக கூறியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

OPERATION SINDOOR- இந்திய ராணுவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
OPERATION SINDOOR- இந்திய ராணுவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக தரமான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியதில், பாகிஸ்தான் பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பலர் உயிரிழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பலரும், தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டு வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ‘இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளதாவது, “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழகம் உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.






அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய பாதுகாப்பு படையை நான் பாராட்டுகிறேன் என்று எதிர்கட்சி துணைத்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.




பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை என்றும், மத்திய அரசுக்கு துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.






பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளவுந்திராஜன்




பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியத்தற்கு, நம் தேசத்தின் ராணுவ வீரர்களை வணங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது,

நம் இந்தியர் சிந்திய ரத்தத்திற்கு, ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் நீதி கிடைத்திருக்கிறது. தீவிரவாதத்தின் மூலம் மற்றும் வேர் அழிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதத்தினால் சிதைந்த நம் இந்தியருக்கு நீதி கிடைக்க பாகிஸ்தானின். தீவிரவாத. பதுகுழிகளை.. இந்தியா சிதைத்து இருக்கிறது. War room.. அதாவது போர் அறையில் இருந்து.. பாகிஸ்தான் திருப்பி அறையப்படுவதை வீரத்துடன் கண்காணித்து வருகிறார் நம் உறுதி மிக்க பிரதமர் இந்தியர் சிந்திய குருதிக்கு.. உறுதியான பதிலடி கொடுப்பதை உறுதி செய்கிறார் பிரதமர் ,

இந்தியர்களின் உயிர் காக்க அது வைரஸ் (virus) ஆக இருந்தாலும், வார் (war) ஆக இருந்தாலும், பாண்டமிக் (pandamic) ஆக இருந்தாலும், பாகிஸ்தானாக இருந்தாலும்.. வெற்றி கொள்வோம் என பறை சாற்றிக் கொண்டிருக்கிறார் நம் பிரதமர்.. பாகிஸ்தானுக்கு எதிரான.. போர் பறை கொண்டு நிரூபித்துக் கொண்டிருக்கிறது நமது ராணுவம் தீவிரவாத குருதியினால்.. சிகப்பான நம் காஷ்மீரத்து வெள்ளை ரோஜாக்கள்.. இனி காஷ்மீர் அமைதி பூங்காவில் வெள்ளை ரோஜாக்களாகவே மலரும்..
பாகிஸ்தானின் ஆணவத்திற்கு.. பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கும்.. நம் இந்திய ராணுவத்திற்கு. இந்த வெள்ளை ரோஜாக்கள் சமர்ப்பணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை


பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ்தளத்தின் பதிவில் கூறியுள்ளதாவது, பயங்கரவாதிகள் அவர்களுக்குப் புரியும் மொழியில் கொல்லப்படுகிறார்கள்!

ஜெய் ஹிந்தி! என்று தெரிவித்துள்ளார்.