பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தரமான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் இந்த போர்பதற்றம் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலி
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் பொறுப்பேற்றது. இதனையடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.
போர் பதற்றம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தொடர்ந்து, இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும், அதன்படி, நாடு முழுவதும் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது மற்றும் வெளியேற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் சிந்து
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ந்து போய் உள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பலரும், தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டு வருகின்றனர்.
டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை
இந்நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் வெள்ளை மாளிகையில் செய்தியளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகை வாசல் அருகே நடந்து வரும்போதுதான் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறித்து தகவல் கிடைத்து. கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்கு தெரியும். இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவும், பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் நடவடிக்கைகளை உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருவதகாவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.