இந்தியா

"இந்தியா - பாகிஸ்தான் போர்; உலகம் தாங்காது" - ஐநா சபை பொதுச் செயலாளர் கவலை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது என்று கவலை தெரிவித்துள்ள ஐநா சபை பொதுச் செயலளார் ஆண்டனியோ குட்டர்ஸ், இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஐநா சபை பொதுச் செயலளார் ஆண்டனியோ குட்டர்ஸ்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலா பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இதனையடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்து உத்தரவு வெளியிட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் பொறுப்பேற்ற நிலையில், அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.


Read More:OPERATION SINDOOR - பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதிரடி!

இந்திய ராணுவத்தினர் ஆப்ரேஷன் சிந்தூர், என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியா நடத்திய தாக்குதலில், பாகிஸ்தனியர்கள் 8 பேர் உயிரிழுந்துள்ளாதாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், 3 அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவத்தின் பாகிஸ்தான் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரில் உள்ள முசாபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட், சக் அமரு, முரிட்கே, பஹவல்பூர் உள்ளிட்ட 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத குழுக்களின் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக பேசிய ஐநா சபை பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர், "எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐநா சபை பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறினார்.