ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் பொறுப்பேற்றது. இதனையடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்து உத்தரவு வெளியிட்டது.
இந்தியா முழுவதும் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவத்தின் பாகிஸ்தான் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரில் உள்ள முசாபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட், சக் அமரு, முரிட்கே, பஹவல்பூர் உள்ளிட்ட 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத குழுக்களின் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நள்ளிரவில் நடத்தியது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கிரன் ரிஜ்ஜு, பியுஷ் கோயல் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆகியோர் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த் முழக்கங்களை மத்திய அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
With the signing of the landmark Free Trade Agreement with the UK, Bharat today set a significant milestone under the leadership of PM Shri Narendra Modi Ji. The agreement elicits Modi Ji's astute vision to strengthen our foreign trades by providing them with the winning edge in…
— Amit Shah (@AmitShah) May 6, 2025