கடந்த மாதம் (ஏப்.22 ) பஹல்காமில் இந்திய சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி தான் ஆபரேஷன் சிந்தூர் என்று கூறிய வெளியுறவுத்துறை செயலாளர் தாக்கப்பட்ட 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் குறித்து வீடியோ பதிவுடம் விளக்கமளித்தார். மேலும் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பஹல்காமில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.
2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய உயிரிழப்பு பஹல்காம் தாக்குதல் என்று கூறிய அவர் கோழைத்தனமான தாக்குதல் என்று விமர்சித்த அவர், பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று கூறினார்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் செழித்தோங்கிய சுற்றுலாத்துறையை சீர்குலைக்க தாக்குதல் நடத்தப்பதாகவும், இந்தியாவில் மதக்கலவரத்தை உருவாக்க பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சுற்றுலா பயணிகள் அவர்களது குடும்பத்தினர் முன்பு சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரின் முக்கிய 9 இடங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். இந்த தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் உள்ளிட்டவை இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டது.
இந்திய ராணுவம் நடத்திய ஏவுகனை தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத அமைப்புகளும், ஆதரவாளர்களும் நேரடி தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மிக நிதானமாகவும், தெளிவாகவும் திட்டமிட்டு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தினோம் என்று கூறினார்.
பயங்கரவாதிகள் முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டது, பாகிஸ்தான் ராணுவ தளமோ அல்லது பொதுமக்கள் பகுதியோ தாக்கப்படவில்லை என்று கூறிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என்று கூறினார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளதாகவும் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை, இந்தியா ஒருபோதும் பொருத்துக்கொள்ளாது என்ற செய்தி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது . நீண்ட காலமாக பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருகிறது. இந்தியாவின் பதிலடி, தேசிய பாதுகாப்பிற்கும், சமூக ஒற்றுமைக்கும் அவசியமான ஒன்றாகும். நாட்டின் அமைதிக்காவும், நீதிக்காகவுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலின் மூலம், அந்த அமைப்புகளின் செயல்திறன் பெரிதும் பாதிக்கப்படும் என்று வெளியுறுவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.