கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், ஜி.டி. நாயுடு மேம்பாலம் திறப்புக்குப் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து ஆளும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திமுக - அதிமுக இடையே வாக்குவாதம்
கோவை மாநகராட்சிப் பிரதான அலுவலகத்தில் இன்று காலை மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க.வினர் தங்கள் கோரிக்கைகள் மற்றும் சாதனைகள் குறித்த பேசினர்.
சமீபத்தில் அவிநாசி சாலையில் ஜி.டி. நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில், இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் வாசிக்கப்பட்டபோது, அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் எழுந்து, "இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் ஒரு சேர ஒன்றிணைந்து பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
அதிமுக வெளிநடப்பு
இந்தச் சிறப்பு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்த்து, அ.தி.மு.க. உறுப்பினர்களான பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் "எடப்பாடி பழனிசாமி வாழ்க!" மற்றும் "வேலுமணி வாழ்க!" என கோஷமிட்டபடியே கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. உறுப்பினர் பிரபாகரன், மேயர் பல்வேறு கட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். "103 தீர்மானங்களில் 55 தீர்மானங்களுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்திருக்கக் கூடும், எனவே இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.