கன்னியாகுமரி மாவட்டம், களியலை அடுத்த பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணியில் இயங்கி வரும் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் பத்துகாணி அரசு பள்ளியிலும், மற்றொருவர் நாகர்கோவிலை அடுத்த நாவல்காடு அரசு பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
பழங்குடியின பெண் அசத்தல்
பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஷீலா. இவருடைய தங்கை மற்றும் தம்பியும் கூட இதே அரசு பள்ளியில் படித்தவர்கள். தங்கை தபால்துறையில் அரசு வேலையில் உள்ளார். தம்பியும் தனியார் துறையில் வேலை செய்து வருகிறார்.
ஷீலா பத்துகாணி அரசு பள்ளியில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கி படித்து பள்ளி பருவத்தை முடித்தார். ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறையில் உள்ள தொடக்க தொடக்கப்பள்ளியில் வேலை செய்து வந்தார்.
பொதுமக்கள் வாழ்த்து
இந்நிலையில் ஷீலா தான் படித்த பத்து காணி அரசு உண்டு உறை விட மேல்நிலைப்பள்ளியில், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்று கொண்டார்.
இது அரசு பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் உத்வேகமாகவும், ஊக்கமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக பழங்குடி மக்களும் படித்தால் உயர்வு உண்டு என்ற நம்பிக்கையை தருவதாக அமைந்துள்ளது. முன்னாள் மாணவி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றுள்ள செய்தியை அறிந்த உடன் படித்த நண்பர்கள், ஊர்மக்கள், மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், உடன் வேலை செய்யும் மற்ற ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.