இந்தியாவில் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது ‘பிக் பாஸ்’ என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி இந்தியில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து மற்றம் மொழிகளில் தொடங்கப்பட்டது.
இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 19-வது சீசன் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஒரு AI ரோபோ போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஹபுபு என பெயர் சூட்டப்பட்ட இந்த AI ரோபோ, பிக் பாஸ் 19-ல் விளையாட்டு வடிவத்தை மாற்றி, போட்டியாளர்களுக்கு எதிர்பாராத சவால்களையும் திருப்பங்களையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள ஐ.எஃப்.சி.எம் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த AI ரோபோ, மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு உரையாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரோபோ வீட்டு வேலைகளை செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த AI ரோபோ சமைப்பது, பாடுவது மற்றும் மனிதர்களுடன் உரையாடவும் செய்யுமாம். இந்த ஹபுபு ரோபோ இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் சரளமாக பேசும் என கூறப்படுகிறது.
ஹபுபுவின் செயல்திறன் அதன் சக மனித போட்டியாளர்களை விட அதிகமாக இருக்கும் என்பதால், AI ரோபோவுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு நியாயமான போட்டி இருப்பதை உறுதி செய்ய பிக் பாஸ் சில மறு ஆய்வுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிக் பாஸ் சீசன் 19-ல் AI ரோபோ போட்டியாளராக களமிறக்கவுள்ளது என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் பிக்பாஸ் தமிழிலும் AI போட்டியாளர் களமிறக்கப்படுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இருப்பினும், AI ரோபோ போட்டியாளராக பங்கேற்பது குறித்து பிக் பாஸ் தயாரிப்பாளர்கள் தரப்பில் எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.