K U M U D A M   N E W S

Author : Vasuki

தண்டவாளத்தில் விழுந்த நாய்.. அலட்சியமாக செயல்பட்ட உரிமையாளர்.. வைரலாகும் வீடியோ!

மும்பையில் ஓடும் ரயிலில் தன் வளர்ப்பு நாயுடன் ஏற முயன்ற நபர் அலட்சியமாக இருந்ததால், அவருடைய நாய் தண்டவாளத்தில் விழுந்த சம்பவம்  அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

ராட்வீலர் நாயை ஏவிவிட்ட உரிமையாளர்.. நிர்வாணமாக ஓடிய முதியவர்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் நாய் கடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாங்காடு பகுதியிலும் 11 வயது சிறுவன் ராட்வீலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டார்.

உடை மாற்றும் போது கேரவன் உள்ளே நுழைந்த டைரக்டர்.. மனம் திறந்த அர்ஜூன் ரெட்டி நடிகை!

கேரவனில் உடை மாற்றும் போது திடீரென இயக்குநர் உள்ளே வந்ததாக அர்ஜூன் ரெட்டி பட நடிகை குற்றம் சாட்டியுள்ளது தென்னிந்திய திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - சட்டசபையில் காரசார வாதம்

கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

பாஜக கூட்டு.. EPS-க்கு வேட்டு? வளர்ப்பு மகன் வாக்குமூலம்..! வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு செல்லலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி. சும்மா இருக்குமா தி.மு.க? கொடநாடு வழக்கு விசாரணைக்குள் எடப்பாடியை இழுத்துவிட்டு தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது ஆளும் தரப்பு என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

என் தந்தையின் நாட்டுக்கு நிச்சயம் செல்வேன்..இந்தியாவை வர்ணித்த சுனிதா வில்லியம்ஸ்!

"நான் என் தந்தையின் சொந்த நாடான இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்” என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

PF கணக்கு வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கான ஒரு ஹாப்பி நியூஸ் தான் இது.. 

EPFO பயனாளர்கள் UPI மற்றும் ATM மூலமாக தங்கள் PF பணத்தை எடுக்கலாம் என்றும், மேலும் இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் EPFO ​​உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.

நாலு மாஜி தளபதிகளுக்கு தடை.. இலங்கைக்கு உருவான புது தலைவலி..!

ஐ.நா. சபையே அறிவிக்கத் தயங்கிய நிலையில் மாஜி சிங்கள தளபதிகள் மற்றும் கருணா ஆகியோரை 'போர்க்குற்றவாளிகள்' என்று அறிவித்ததுடன், நாட்டுக்குள் நுழையவும் தடைவித்து சர்வதேச அளவில் பேசுபொருளை உண்டாக்கியது. இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2025: ஹாட்ரிக் வெற்றி பெறுமா RCB..? குஜராத் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் 14 வது லீக் போட்டி பெங்களுருவில் நடைபெறும் நிலையில், இன்றையப்போட்டியில் பெங்களுரு ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆசையாய் சாப்பிட்ட பிரியாணியால் வந்த வினை.. 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்!

திருவல்லிக்கேணி மற்றும் மவுண்ட் ரோட்டில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல்களில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்.. சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் அதிரடி

சென்னை துறைமுகத்தில் சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.26.4 கோடி ரூபாய் மதிப்புடைய வாசனை திரவியங்கள், காலணிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்ய்ப்பட்டுள்ளது. 

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மனு.. தமிழக அரசுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்கலம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Waqf Amendment Bill: மக்களவையில் நாளை தாக்கலாகிறது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா!

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஏப்.2) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

2- வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது - அமைச்சர் எ. வ. வேலு

இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்னைகளை உணர்ந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - மதுரை ஆதினம் பேச்சு

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அரசியல் தெரிந்து பக்குவப்பட்டவர்கள் மட்டுமே அரசியலில் வரவேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

பங்குனி ஆறாட்டு திருவிழா.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பங்குனி ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.  நாளை கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.

காணக்கிடைக்காத அதிசயம்.. சிவபக்தர்களின் கவனத்திற்கு!

நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஓடிடி, வெப் சீரிஸ் உள்ளிட்ட தளங்களால் வாய்ப்புகள் அதிகரிக்கிறது - நடிகை மிருணாளினி

திரையுலகை சேர்ந்த பெண்களுக்கு ஆண்களின் இடையூறு ஏற்படாமல் தவிர்க்க, தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அதுவே தன் அனுபவம் என்று நடிகை மிருணாளினி கருத்து தெரிவித்துள்ளார்.

பெண் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் அரசாணை அமலில் உள்ளது - தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசானை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

IPL 2025: 2-வது வெற்றி யாருக்கு? லக்னோ - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 13வது லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  35–38° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32–35° செல்சியஸ்,  மலைப் பகுதிகளில்  21–30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

IPL 2025: கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி 

MI vs KKR:  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மும்பை அணியின் இளம் அறிமுக வீரர் அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 

மதுரையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

 கிளாமர் காலி கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அக்கொலை வழக்கில் மேலும் மூவரை பிடிக்க சென்றபோது காவலர் மீது தாக்குதல் நடத்தியதால், காவல் ஆய்வாளர் பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார். 

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா.. குதிரை ஆட்டத்துடன் தேரோட்டம்!

அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு குதிரை ஆட்டத்துடன் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தகுதி வாய்ந்தவர்களுக்கு மூன்று மாத்தில் மகளிர் உரிமைத்தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் உரிய விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.