அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம்.. வேறு நபருக்கு பட்டா!
திருப்பூரில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை தவறுதலாக வேறு நபருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருப்பூரில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை தவறுதலாக வேறு நபருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘ரெட்ரோ’ படக்குழு, மே 1ம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரயில்வே துறை மேற்கொண்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையால், கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது.
பிரதமர் மோடியின் தனி செயலராக, இளம் பெண் IFS அதிகாரியான நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதி திவாரி நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.
நீலகிரியில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார். வார நாட்களில் 6,000 வாகனங்களும், வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில், தமிழக பெண்கள் கபடி அணியினர் வெண்கல பதக்கம் வென்று சாதனைப்படைத்த கபடி வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில், சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டி20 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பெறுவதற்கு போராடி வருகிறது. அதே போல் 3 முறை கோப்பைகளை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான கொல்கத்தா அணி, தங்களுடைய 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. 2 பலம் வாய்ந்த அணிகளும் மோதும் போட்டி என்பதால், இன்றையப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2025 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.
செங்கோட்டையனுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க வார விடுமுறை நாளான இன்று அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
விஜய் போன்றவர்களுக்கு படத்திற்கு பல மொழி வேண்டும், ஆனால், பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா? என்று கேள்வி எழுப்பியுளார். முதலில் திமுக எதிர்ப்பை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சியில் பெண் ஊழியர்களிடம் பேரூராட்சி தலைவர் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிசிடிவி ஆதாரங்களுடன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் அளித்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், இரவு நேரத்தில், வீட்டிற்கு புறப்பட்ட பெண் ஊழியரின் கைப்பையை வலுக்கட்டாயமாக தலைவர் பறித்து வைத்து கொண்டு அலக்கழிக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கேரளாவில் எங்கு விபத்து ஏற்பட்டு இறந்தாலும் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் பொன்முடியிடம், அங்கிருந்த சிலர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுகாத்தியில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன.
ஐபிஎல் 18 வது சீசனில் 10 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். இரண்டு அணிகளும் தங்களுடைய 2-வது வெற்றிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
GT vs MI: ஐபிஎல் 2025 டி20 தொடரில் 9 லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைடன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 63 விளாசினார்.
இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில், இதன் மூலம் 5 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலூரில் முத்துமாரியம்மன் கோவிலில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி நடைபெற்ற பூஜையில் திரளான பெண்கள் கலந்துக் கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் திருவிழா போல இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மைதாங்களில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 18 வது சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றனர்.
2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு வருகைத்தர உள்ளது. கால்பந்து உலகின் மன்னன் லியோனல் மெஸ்ஸி 14 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு வருவது, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநீரக மோசடி மூலம் சட்டவிரோத பணப்பரிவர்தனையில் ஈடுபட்ட வழக்கில் மருத்துவர் வி.எம்.கணேசன் அவரின் மனைவி உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய நாட்டின் கடல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் சைக்கிள் பேரணி விழிப்புணர்வு இன்று வேதாரண்யம் வந்தடைந்த நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.