சினிமா

விஜய்க்கு த்ரிஷாவின் ஸ்பெஷல் வாழ்த்து... 'Pure Gold Couple' என ஒரே வரியில் பற்ற வைத்த சார்மி!

முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி நடிகை த்ரிஷா, "எல்லாவற்றுக்கும் அர்த்தம் கொடுப்பவர்" என்று குறிப்பிட்டு வாழ்த்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை சார்மி கவுர் "Pure Gold Couple" என கமெண்ட் செய்தது வைரல்

விஜய்க்கு த்ரிஷாவின் ஸ்பெஷல் வாழ்த்து... 'Pure Gold Couple' என ஒரே வரியில் பற்ற வைத்த சார்மி!
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் ஜூன் 22 அன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு நடிகை த்ரிஷா, பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதோடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியது போன்ற படத்தையும் நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார். இது தொடர்பாகப் பதிவில், “எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த நபருக்கு, பிறந்தநாள் வாழ்த்துகள்! 00:00” எனக் குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகை சார்மி கவுர் "Pure Gold Couple" என்று கமெண்ட் செய்ததும், சமூக வலைதள வாசிகள் வழக்கம்போல டிடெக்டிவ் வேலையில் இறங்கிவிட்டனர். "இது வெறும் நட்பா? இல்லை வேறு ஏதாவதா?" என்று இணையவாசிகள் விவாதத்தில் மூழ்கியுள்ளனர்.

பல வெற்றிப் படங்களில் ஜோடியாக கலக்கிய விஜய் - த்ரிஷா, திரையிலும் சரி, திரைக்கு வெளியிலும் சரி, ரசிகர்களுக்கு எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகின்றனர். ஆனால், இந்தக் கிசுகிசுக்களுக்கு இருவரும் வழக்கம்போல அமைதியே பதிலாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், சார்மி கவுரின் ஒரு "Pure Gold Couple" கமெண்ட், காட்டு தீ போல் பரவிவருகிறது.