அண்மை

திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் சர்வே எடுக்க அவகாசம்! ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு..

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் மலை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கோரிய மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் சர்வே எடுக்க அவகாசம்! ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு..
திருப்பரங்குன்றம் மலையில் பல்வேறு கட்டுமானங்கள் மற்றும் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி , மலை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் அதை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம் முன்பு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அரசு தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிலை அளவீடுகளில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பின் அளவீட்டில் தெளிவின்மை இருப்பதால் அதை மீண்டும் துல்லியமாக சர்வே செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.மலையில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கப்பணிகள் குறித்த முழு விவரங்களும சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று அறிக்கையில் தெரிவித்திருந்தது.


மேலும்அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் 5 ஏக்கர் நிலப்பரப்பை மீண்டும் முழுமையாக அளவீடு செய்ய 4 வார கால அவகாசம் வழங்கியும் மலையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விரிவாக்கப் பணிகள் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து முழுமையான சர்வே அறிக்கையுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


4 வாரங்களுக்குள் புதிய சர்வே அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு திருப்பரங்குன்றம் மலையின் உண்மையான பரப்பளவு மற்றும் ஆக்கிரமிப்பு, அனுமதியற்ற கட்டுமானங்கள் உள்ளனவா ASI கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளதா, என்பன குறித்து நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.