K U M U D A M   N E W S
Promotional Banner

ஐயா...ஜாலி... எங்க ஊருக்குப் பஸ் வந்துடுச்சு.. 13 வருடக் காத்திருப்பைக் கொண்டாடிய பொதுமக்கள்!

குடியாத்தம் அருகே 13 வருடங்கள் கழித்து, தங்கள் கிராமத்திற்கு வந்த பேருந்தைக் குத்தாட்டம் போட்டு பேருந்தினை உற்சாகமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

இந்த வருடம் RCB.. அடுத்த வருடம் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல் நம்பிக்கை!

ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!

“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய யஷ் தயால்.. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இளமைத் தேசிய கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியைச் சேர்ந்தவுமான யஷ் தயால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

சென்னையில் விதிமீறும் வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இரண்டு மாத காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

திமுகவின் ஊதுகுழலாக சிபிஎம் செயல்படுகிறது- நயினார் நாகேந்திரன்

தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்கள் மீது அக்கறை - செந்தில் பாலாஜியை சாடிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது தினசரி நடந்து வரும் நிலையில் வருவாய் துறை, காவல் துறை, வனத்துறை என அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

ஆளுநர் திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

ENG vs IND அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி. லண்டன் லார்ட்சில் இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது.

Viral Video: உசுரு முக்கியம்.. ஹெல்மெட்டுடன் பஸ் ஓட்டிய டிரைவர்!

கேரளாவில் அரசு பேருந்நு ஓட்டுநர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யா லிபெட்ஸ்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்.. மீட்பு பணிகள் தீவிரம்!

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் இன்று அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், ஆளுநர் இகோர் ஆர்தமோனோவ் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நம்பிக்கை

சாதி மத பேதமின்றி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வரும் ஆபத்தை தடுக்க நாம் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை அறிவித்துள்ளார்

காவலாளி அஜித்குமார் மரணம்.. அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அஜித்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கும் விஜய்.. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தவெக மனு!

எழும்பூர், காவல் ஆணையர் அலுவலகம், ஆர்பாட்டம், சிவகங்கை, அஜித்குமார்,த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கப் மரணத்தில் முதலமைச்சர் பச்சைபொய் பேசலாமா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

போதைப் பொருட்கள் இன்றைக்கு கிராங்களில் கிடைக்கும் அளவில் வேரூன்றி விட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆர்சிபி வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!

ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பை பறிப்பதுதான் அவர்களின் திட்டம்.. ராகுல் காந்தி

ஏழைகளின் உரிமைகளை பறித்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்துவதே ஆர்எஸ்.எஸ். - பாஜகவுக்கு நோக்கம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

'சோசலிஸ்ட்' & 'மதச்சார்பற்ற' வார்த்தைகள் நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.. தத்தாத்ரேய ஹோசபலே

அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.

திராவிடத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- கனிமொழி எம்.பி.,

பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா.. மோகன் பகவத் பங்கேற்பு

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நீரை சேமிக்க வேண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அழிவிற்கு முன்பு நாம் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்.. அதிமுகவினர் உடலில் ஓடுவது ரத்தமா? பாஜக பாசமா? - ஆர்.எஸ்.பாரதி சாடல்

அண்ணாவின் பெயரைத் தாங்கிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அண்ணாவுக்கும், பெரியாருக்கும் பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.