தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கடுமையான தோல்வியை சந்தித்து, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலையில், அக்கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அணிக்கும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். அண்மையில் வைகைச் செல்வனும் அதிமுகவிலிருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், சி.வி.சண்முகம் அதிமுகவில் தொடர்வதா அல்லது புதிய அரசியல் பாதையை தேர்வு செய்வதா என்பது குறித்து ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தவெக கொடி கட்டிய காரில் சில நிர்வாகிகள் வந்ததாக வெளியான தகவல்கள், அவர் தவெகவில் இணைய உள்ளாரா என்ற கேள்வியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7