புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் போர் தாலுகா பகுதியில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. நேற்று மதியம் காணாமல் போன நான்கு வயது சிறுமியை அவரது குடும்பத்தினர் தேடியபோது, அந்தப் பெண் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் அந்தச் சிறுமியை அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சிக்கின. அதன் அடிப்படையில் அந்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கல்லால் தலை நசுக்கிக் கொல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் சாலை மறியல்
இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த நஸ்ராபூர் கிராம மக்கள், புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிக்கு உடனடி மற்றும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் உடல் கொண்டு வரப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீதி கேட்டு முழக்கமிட்டனர்.
விரைவு நீதிமன்றத்தில் விசாரணை
சம்பவம் குறித்துப் பேசிய புனே கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில், அடுத்த 15 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்தார். மேலும், இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என அவர் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தார். தற்போது முதியவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LIVE 24 X 7