இந்தியா

சமூக மாற்றப் பணிக்கு கௌரவம்... ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது!

மும்பையில் நடைபெற்ற விழாவில் ரெக்கிட் நிறுவனத்தின் இயக்குநர் ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.

சமூக மாற்றப் பணிக்கு கௌரவம்... ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது!
ரெக்கிட் நிறுவனத்தில் தெற்காசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் (MENARP) பிராந்தியங்களுக்கான பெருநிறுவன தகவல் தொடர்பு மற்றும் வெளி விவகாரங்கள் இயக்குநராக ரவி பட்நாகர் பணியாற்றி வருகிறார். சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்துவதில் இவர் சிறப்பான அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘யுவா அன்ஸ்டாபபுள்’ அமைப்பு அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பு சீரமைத்த 10,000-ஆவது அரசுப் பள்ளியின் திறப்பு விழாவின்போது, ரவி பட்நாகருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மும்பையில் உள்ள ஆர்யன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக சேவை, பொதுவாழ்வு மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். சமூக மாற்றத்திற்காகவும், தேச வளர்ச்சிக்காகவும் சிறப்பாக பங்களித்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

சுகாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு துறைகளில் ரவி பட்நாகர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவே ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.