ஆடிக்கொண்டிருந்த ஆட்சிக் கட்டிலின் கால்களுக்கு அரக்கப் பரக்க முட்டுக்கொடுத்து, முதல்வர் விஜய் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், உள்ளாட்சி அமைப்புகளோடு மல்லுக்கட்டும் நிலை த.வெ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே, 'வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் த.வெ.க.தான் வெல்லும்' என்று பேசி எதிர்க்கட்சியினரை கிலியடைய செய்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படப் போவதாகவும், அவற்றை கைப்பற்ற த.வெ.க குறிவைப்பதாகவும் பேச்சுக்கள் எழவே சூடாகியிருக்கிறது அரசியல் களம் இதுகுறித்து மூத்தப் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசினோம்.
"உள்ளாட்சி அமைப்புகள், மாநில நிர்வாகம், மத்திய நிர்வாகம் என இந்தியாவில் மூன்று அடுக்குகளாக நிர்வாக அமைப்பு உள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊரகம். நகர்ப்புறம் என இரு வகை உண்டு. தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவானதினால் 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் 2019லும், எஞ்சிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு 2021லும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 2022ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
2019ல் தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் 2025 ஜனவரியுடன் ஐந்தாண்டுகால பதவிக்காலம் முடிந்துவிட்டது. இங்கு ஸ்பெஷல் ஆபிஸர்ஸ் மேற்பார்வையில் நிர்வாகம் நடக்கிறது. அதேபோல, 2021ல் தேர்தல் நடந்த இடங்களுக்கு அக்டோபர் 2026லும், 2022ல் தேர்தல் நடந்த நகர்ப்புறத்திற்கு பிப்ரவரி 2027லும்தான் பதவிக்காலம் முடிகிறது. இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, தமிழக உள்ளாட்சிகளுக்கு ஒரேடியாக தேர்தல் நடத்தப்போவதாக பேச்சுக்கள் எழுந்தன.
உடனே, பதவிக்காலம் முடியாத பிரதிநிதிகள் நீதிமன்றங்கள் வரை போர்க்கொடி தூக்கியது ஒருபுறம் என்றால், வார்டு மறுவரையறை இட ஒதுக்கீட்டுப் பணி உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திவைத்தது மாநிலத் தேர்தல் ஆணையம் இப்போது சட்டமன்றத் தேர்தலும் நடந்து, ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுவிட்டதால் உள்ளாட்சியை மையப்படுத்தி தமிழக அரசியல் களமே வேறுமாதிரி பரபரக்கிறது. இதுவரை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அதிகாரத்தில் தி.மு.க., அதி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான் இருந்துவருகிறார்கள். ஒரு சில பதவிகள் வி.சி.க. காங்கிரஸ் உள்ளிட்ட இதரக் கட்சிகள் வசம் உள்ளன.
மத்திய, மாநில அரசின் திட்டங்களை சரியாக மக்களிடம் கொண்டு சேர்த்து முழுமைப்பெற வைப்பதற்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அவசியமானது. ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க. அ.தி.மு.க வசமுள்ள உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாறாக, உள்ளாட்சிப் பிரதிநி திகளுடன் பனிப்போரும். மோதலும், சலசலப்புகளும்தான் மேலோங்கி இருக்கிறது.
உதாரணமாக தி.மு.கவைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயரை முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கவில்லை என கூறப்படுகிறது. அதற்கேற்ப, சென்னை மேயரும் துணை மேயரும் இதுவரை மரியாதை நிமித்தமாகக்கூட முதல்வர் விஜய்யை சந்திக்க வில்லை. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல் முறை நடந்த சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்திலும் ஏகப்பட்ட களேபரங்கள்.
அதேபோல மற்ற மாநகராட்சி கூட்டங் களிலும் கூச்சல் குழப்பம்தான் நிலவுகிறது. சில மாநகராட்சிகளில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வைக்கவும் திமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் த.வெ.க. பக்கம் தாவிவிட்டதால் தி.முக ஆதரவில் உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள காங்கிரஸ்காரர்ளுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதும் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், 'விரைவிலேயே உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. அதில் 234 தொகுதிகளிலும் தவெ.க.தான் வெல்லும்' என சொன்னதோடு, இதுதொடர்பாக நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை கூறியிருப்பதாக தகவல் கசிகிறது.
உள்ளாட்சித் தேர்தலை நோக்கி தவெக காய்நகர்த்த தொடங்கியிருக்கும் நிலையில், சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றிபோல உள்ளாட்சியிலும் 'விஜய் ஃபேக்டர் கை கொடுக்கும் என நம்புகிறது த.வெ.சு. தலைமை. அதேசமயம், திராவிடக் கட்சிகளும் தற்போதிருந்தே களப்பணியை தீவிரப்படுத்தி யுள்ளன. இதையடுத்து. உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு வாய்ப்பு உள்ளது' என்றார்.
நகர்ப்புற உள்ளாட்சியை கலைத்துவிட்டு ஒரேடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமா? சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். "பொதுவாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை சரிவர நடத்துவதில்லை. இப்போது ஒரேடியாக உள்ளாட்சித் தேர்தல் எனும்போது சிக்கல் என்னவென்றால், நகர்ப்பகுதிகளில் இருப்பவர்கள் பதவிக்காலம் கிட்டத்தட்ட ஓராண்டு பறிபோகிறதே என யோசிப்பார்கள். அவர்களுக்காக காத்திருந்தால், ஊரகப் பகுதிக்கான தேர்தல் காலதாமதம் ஆகும்.
அதனால் கிராமப்பகுதியில் பணிகள் தடைபட்டு நிற்கும். இது ஒரு சிக்கலான சூழல், என்னைப் பொறுத்தவரை ஊரகம் மற்றும் நகர்ப்பகுதிகளுக்கு ஒன்றாக தேர்தல் நடத்துவது சிறந்தது. சட்டத்திற்கு மாறாக தேர்தல் நகர்வு செய்யப்பட்டால், பதவிக்காலம் முடியாமல் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றம் போக வாய்ப்புள்ளது. எனவே, சட்ட விதிமுறைகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். அதேபோல, ஒரேகட்டமாக உள்ளாட்சித் தேர்தல் என்பதை தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசின் கொள்கை என அறிவித்துவிட்டால் பதவி இழப்பவர்களால் எதுவும் செய்ய முடியாது. தேர்தலை நடத்தித்தான் ஆகவேண்டும்" என்றார்.
2026 ஆண்டு முழுவதுமே தேர்தல் திருவிழாதானா?

LIVE 24 X 7