வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் குறித்த மனு.. ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வெள்ளிப் பதக்கம் கோரிய மனு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வெள்ளிப் பதக்கம் கோரிய மனு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Pakistan Gold Medalist Arshad Nadeem Buffalo Gift : ''எங்களது சமுதாயத்தில் எருமை மாட்டை பரிசாக வழங்குவது என்பது மிகவும் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய செயலாகும்'' என்று அர்ஷத் நதீமின் மாமனார் முகமது நவாஸ் கூறியுள்ளார்.
Paris Olympics 2024 : கோலாகலமாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024, இன்று அதிகாலை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதோடு நிறைவடைந்தது.
Kieron Pollard Hit Record Six of Rashid Khan Bowling : ரஷித்கான் ஷாட் பிட்ச்சாக போட்ட முதல் பந்தை லெக் சைடில் தூக்கி அடித்து சிக்ஸர் விளாசிய கிரன் பொல்லார்ட், 2வது பந்தையும் அசால்ட்டாக ஆப் சைடில் தூக்கி அடித்து சிக்ஸராக மாற்றினார். இதனால் மிரண்டு போன ரஷித்கான், 3வது பந்தை லைன் அண்ட் லென்த்தை மாற்றி போட, அதையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு கெத்து காட்டினார் பொல்லார்ட்.
Paris Olympics 2024 : இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. ஓலிம்பிக் நிறைவு விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் இரட்டை பதக்க நாயகி மனு பாக்கர் மற்றும் ஹாக்கி அணியில் வெண்கலம் வென்ற ஸ்ரீஜேஷ் ஆகியோர் நமது தேசியக்கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர்.
''ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றபோது, தொடக்கத்தில் அந்த பதக்கம் பளபளப்புடன் இருந்தது. ஆனால் வீட்டுக்கு வந்த ஒரு வாரத்துக்குள் பதக்கம் வெளுத்து விட்டது'' என்று அமெரிக்க வீரர் நிஜா ஹஸ்டன் கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 55 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில், 21 வயதான இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கமும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கமும் வென்றனர். இதனையடுத்து இரு வீரர்கள் அம்மாக்களும் நெகிழ்ச்சியாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பராகுவே நாட்டு இளம் நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சா ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவரது அழகால் வீரர்களின் கவனம் சிதறுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அது இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, ஒலிம்பிக் தொடர் முடிவதற்குள் இறுதி செய்யப்படும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தற்போது நடைபெற்ற ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஸ்விப் ஷாட் விளையாடும் ரிஷப் பண்ட்டுக்கு முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதே வேளையில் கொஞ்சம் கூட ஃபுட்வொர்க் (கால்களை நகர்த்தி ஆடுதல்) இல்லாமல் விளையாடும் ஷிவம் துபேவுக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். ''வினேஷ் போகத் நீங்கள் இப்போதே தங்கம் வென்று விட்டீர்கள். வலிமையுடன் திரும்பி வாருங்கள். நாடே உங்களுடன் இருக்கிறது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. மேலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.
ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ்போகத்தை, இந்தியத் தடகள விளையாட்டு வீராங்கனையும் பி.டி. உஷா நேரில் சந்தித்து உரையாடினார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில், சதி இருப்பதாக குத்துச் சண்டை வீரர் விஜேந்திர சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வினேஷ் போகத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வினேஷ் போகத் தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில் ,100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.
மனு பாக்கர் வந்த ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு வந்தது. ஆனால் இதையும் பொருட்படுத்தாமல், லேசாக தூறிய மழைக்கு மத்தியிலும் விமான நிலையத்தில் காத்திருந்த மக்கள் இரட்டை பதக்க மங்கைக்கு மிகப்பெரும் வரவேற்பு கொடுத்தனர்.
ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிய நிலையில், இரு அணி வீரர்களும் 3வது கோல் அடிக்க போராடினார்கள். ஆனால் 54வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்க்கோ 3வது கோல் அடித்து இந்திய ரசிகர்களின் மனதில் ஈட்டியை பாய்ச்சினார்.
நாளை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி, 2024ஆம் ஆண்டிற்கான கடைசி ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்ப்ளிக்கு உதவுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Vinesh Phogat, Neeraj Chopra in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில், இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அதேபோல, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.