K U M U D A M   N E W S
Promotional Banner

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய வரலாற்றை எழுதியது கேப்டன் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (2025)ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.

இப்படி கேட்ச் பிடித்தால் இனி சிக்ஸ்.. கிரிக்கெட் ரூல்ஸை மாற்றியது MCC!

பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.

அதிரடி காட்டிய ஃபின் ஆலன்.. கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து அசத்தல்

மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், 19 சிக்ஸர்களை விளாசி கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.

TNPL: முன்னாள் CSK வீரர் பத்ரிநாத்தை கிண்டல் செய்த RCB ரசிகர்! வைரலாகும் வீடியோ

ஆர்சிபி ரசிகர் ஒருவர் TNPL போட்டியினை வர்ணணை செய்ய வருகைத் தந்த பத்ரிநாத்தை நோக்கி கிண்டலடித்தார். அதுத்தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

AUS vs SA : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங் தேர்வு..!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Nicholas Pooran: நீங்களுமா சார்? 29 வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார் நிக்கோலஸ் பூரன்

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPL: பெண் நடுவருடன் வாக்குவாதம்- முகம் சுளிக்க வைத்த அஸ்வின்

நடைப்பெற்று வரும் TNPL தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், தனக்கு அவுட் கொடுத்த பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையுறையினை பெவிலியன் திசை நோக்கி தூக்கி எறிந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Piyush Chawla: ரியல் சுட்டிக்குழந்தை பியூஷ் சாவ்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!

இந்திய அணியின் ரியல் சுட்டிக் குழந்தை, சுழல் மாயாவி பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

TNPL: வந்த வேகத்தில் கிளம்பிய அஸ்வின்.. திண்டுக்கல் அணிக்கு 150 ரன் இலக்கு

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்.

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் மோதல்

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

துக்க நிகழ்வாக மாறிய RCB வெற்றி கொண்டாட்டம்: 10 பேர் உயிரிழப்பு

நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏலத்தில் எடுக்காததால் விரக்தி.. கபடிக்கு குட்-பை சொன்ன பிரதீப் நர்வால்

நடந்து முடிந்த PKL 12-வது சீசனுக்கான ஏலத்தில், பிரபல கபடி வீரர் பிரதீப் நர்வாலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அளித்துள்ளார் பிரதீப் நர்வால்.

கைக்கொடுக்காத டெஸ்ட்.. வாழ்வு தந்த டி20: அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நார்வே செஸ் போட்டி: முதல்முறையாக கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்

நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் குகேஷ் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

Chance-eh இல்ல.. Chance-eh இல்ல.. நம்ம சென்னை போல வேர ஒரு ஊரே இல்ல - சென்னை மக்களை பாராட்டிய ஜடேஜா!

சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு என்றும் குறையாது. ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை சென்னை மக்கள் குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புகழாரம் தெரிவித்துள்ளார்.

நார்வே செஸ் 2025: குகேஷுக்கு பிறந்த நாளில் முதல் வெற்றி

நார்வே செஸ் 2025 போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் டி. குகேஷ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். 19-வது பிறந்த நாளை கொண்டாடிய குகேஷ், அமெரிக்காவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர் ஹிகரு நகமுராவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டன்.. கழட்டிவிடப்பட்ட முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் அணியினை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய U-19 அணியின் கேப்டனாக CSK வீரர்.. சுட்டிக்குழந்தை சூர்யவன்ஷிக்கும் வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வியாழக்கிழமையான இன்று, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U-19 (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) அணியினை அறிவித்துள்ளது. இங்கிலாந்து U-19 அணிக்கு எதிரான போட்டிகள் ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கோப்பை: இந்திய அணி விலகல்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக அறிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதால் விலகுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீண்டும் வைரலாகும் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.. என்ன காரணம்?

விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனை.. முதல் முறையாக 90 மீட்டர் தாண்டிய நீரஜ் சோப்ரா!

இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பார்முக்கு திரும்பிய பிரக்ஞானந்தா: சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்று அசத்தல்!

கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.

வான்கடேவில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட் திறப்பு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட், மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

இராணுவத்தில் உயர்பதவி.. கெளரவ லெப்டினன்ட் கர்னலாகிறார் நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில், கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்கில் வேலை.. 2 மகள்கள்.. பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பெண்!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.