இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
அஸ்வினின் உருக்கமான பதிவு
அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு புதிய தொடக்கம் இருக்கும் என்பார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது பயணம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடும் எனது புதிய பயணம் இன்று தொடங்குகிறது.
இத்தனை ஆண்டுகளாக நான் விளையாடிய அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும், அனைத்து சிறப்பான தருணங்களுக்கும், உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்கு இதுவரை அனைத்தையும் கொடுத்த ஐபிஎல் மற்றும் பிசிசிஐ-க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
எதிர்காலத்தை உற்சாகமாக எதிர்கொள்ளவும், அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஆவலுடன் உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் பயணமும், சாதனைகளும்
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில், யுஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், சுனில் நரேன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு அடுத்தபடியாக, அஸ்வின் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
ஐந்து அணிகளுக்காக விளையாடிய அஸ்வின், பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். தனது ஐபிஎல் வாழ்க்கையில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 221 ஆட்டங்களில் விளையாடிய அஸ்வின், 187 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும், 833 ரன்களையும் எடுத்துள்ளார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு அரை சதமும் அடங்கும். அஸ்வின் தனது கடைசி ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக வெளியாடினார். அந்த சீசனில் அவர் 9 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, 33 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு தனது சொந்த அணியான சிஎஸ்கேவுக்கு அஸ்வின் திரும்பியபோது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில், அவரது ஓய்வு குறித்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களை பெரிதும் கவலையடைய செய்துள்ளது.