இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்ற நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி நேற்று கியா ஓவல் மைதானத்தில் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் உட்பட இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த 4 இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கான இறுதி டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை. இதைப்போல் இந்தியாவின் நட்சத்திர பவுலர் பும்ராவும் ஆடும் அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ரிஷப் பந்திற்கு பதிலாக துருவ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 38 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் சாய் சுதர்ஷன் - சுப்மன் கில் இணை சிறிது நேரம் களத்தில் தாக்குப்பிடித்து நின்றார்கள். இந்தியாவின் பக்கம் நன்றாக ஆட்டம் சென்று கொண்டிருந்த நிலையில், சுப்மன் கில் தேவையில்லாத தருணத்தில் ரன் ஓட முயன்ற 21 ரன்னில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சாய் 38 ரன்கள் எடுத்த நிலையில் டாங்க் பந்துவீச்சில் அவுட்டாகினார்.
ஒருபுறம் இந்தியாவின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிய, மறுபுறம் மழையும் வெளுத்து வாங்கியது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. கடந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்த அசத்திய ஜடேஜா 9 ரன்களிலும், துருவ் ஜூரல் 19 ரன்களிலும் தங்களது விக்கெட்களை பறிக்கொடுக்க 150 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. மறுமுனையில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தவில்லை என கருண் நாயரின் மீது தொடர்ந்து நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகள் வைத்து வந்த நிலையில், களத்தில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார் கருண்நாயர்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்திருந்தது. இன்றும் மழைக்கான வாய்ப்புள்ளதால், இந்திய அணி விரைவாக ரன்களை குவிக்க முயலும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.