விளையாட்டு

Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
Asia Cup 2025 - IND VS PAK
நடப்பு ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், 'ஏ' பிரிவில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.

இரு அணிகளின் முந்தைய வெற்றி

நடப்பு சாம்பியனான இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில், அமீரக அணியை 57 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, இலக்கை வெறும் 4.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது. அதேபோல், சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

நேருக்கு நேர் வெற்றி நிலவரம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 ஆட்டங்களில் இந்தியாவும், 3 ஆட்டங்களில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணியின் விவரம்

அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான் அணியின் விவரம்

சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷகீன் ஷா அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.