அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை என்றும் நூறு நாள் வேலைக்கு போவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 2) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் பாம்பன் கடல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை 10 மீ. உயரம் தூக்கி சோதனை. தூக்கம் பாலத்தை முழுமையாக மேலே தூக்கி இறக்கி ரயில்வே ஊழியர்கள் வெற்றிகரமாக சோதனை செய்தனர்
மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு வில்லனாக மாறியுள்ளது அவரது குடும்பம்... குடும்பத்தினர் அளித்த தொந்தரவுகளை தாங்க முடியாத கணவர், அவரது மனைவியை குழந்தை போல தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர்மல்க புகாரளித்துள்ளார். என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டம், அக்டோபர் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.
மத்திய அரசு நிதி வழங்காததன் எதிரொலி சமக்ர சிக்க்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3000த்துக்கு மேற்பட்டோருக்கு சம்பளம் இல்லை. செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்காததால் ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி
Medical College Dean Issue in Tamil Nadu : தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் டீன் இல்லாமல் செயல்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
RSS March in Tamil Nadu : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.