K U M U D A M   N E W S

தமிழ்நாடு

இளம்பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள்.. இறுதியில் வெளிவந்த உண்மை

மும்பையில் இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து துரத்தும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

மூடப்பட்ட சென்னை விமான நிலையம்.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.

மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. விமான நிலையம் மூடல்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கரையை கடந்தாலும் விடாத வானம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

திடீரென சரிந்து விழுந்த புறக்காவல் நிலையம். மெரினாவில் பரபரப்பு 

புயல் காரணமாக அதிவேகமாக காற்று வீசியதால் சென்னை மெரினா புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: மழை நீரில் தத்தளிக்கும் பேருந்து நிலையம் 

சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மழையால் வந்த சோதனை.. மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..

சென்னை பிராட்வேயில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி..  அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க முதல்வர் உத்தரவு 

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நூல் வெளியீட்டு விழா.. விஜய் பங்கேற்பதால் நிகழ்ச்சியை புறக்கணித்த திருமாவளவன்

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்

ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. புதுச்சேரி மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகும் அபாயம்..!

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை  புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் சூழலில், கடல் நீர்  மீனவ கிராமங்களுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மூடல்.. போக்குவரத்து தடை..!

ஃபெஞ்சல் புயலினால் ஏற்படும் தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஃபெஞ்சல் புயல் எதிரொலி... பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டு உள்ளன.

ஃபெஞ்சல் புயல்... காற்றின் வேகம் குறைந்தது

ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஃபெஞ்சல் புயல் - குடியரசுத் தலைவரின் திருவாரூர் நிகழ்ச்சி ரத்து

திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் திரெளபதி முர்மு பங்கேற்க இருந்த நிலையில் பயணம் ரத்து

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி... முதலமைச்சர் உத்தரவு

சென்னை வேளச்சேரி விஜயநகரில்  மின்சார ஒயர் அறுந்து 45 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு சார்பாக 5 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பொது போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தும்,  பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும்,  பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல்.. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல்..  90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.. வானிலை மையம் எச்சரிக்கை..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இடையிடையே 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சித்தியை திருமணம் செய்ய அடம்பிடித்த இளைஞர்.. 12 பேரை காதலித்து ஏமாற்றியது அம்பலம்

திருவள்ளூர் அருகே மகன் உறவுமுறை இளைஞர் ஒருவர், சித்தியுடன் தான் திருமணம் செய்து கொண்டு வாழ்வேன் என காவல் நிலையத்தில் அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உருவானது ஃபெஞ்சல் புயல்.. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் ஆரம்பம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறி புயலாக உருவானதாகவும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகுதான் மீண்டும் புயல் சின்னம் உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜாபர் சாதிக் ஜாமீன் மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், கைதான ஜாபர் சாதிக் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவிற்கு வரும் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் அதிகாரிகள்.. விசாரணை நடத்த டிஜிபிக்கு செய்ய உத்தரவு

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன் வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்... இந்த முறை வச்சு வெளுக்கப்போகுது!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

96% பாலியல் கொடுமைகள் இவர்களால் தான் ஏற்படுகிறது - நீதிபதிகள் வேதனை

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் 96 சதவீத வழக்குகள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.