K U M U D A M   N E W S

தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டு சப்ளை.. புதூர் அப்புவிற்கு டெல்லியில் ஸ்கெட்ச் போட்ட போலீஸார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டை சப்ளை செய்த, புதூர் அப்புவை டெல்லியில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

காதல் திருமணம் செய்ய மூதாட்டியிடம் நகை பறிப்பு.. தனிப்படை அமைத்துப் பிடித்த போலீஸார்

காதல் திருமணம் செய்ய மூதாட்டியின் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற புதுமாப்பிள்ளையை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Live : ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றங்கரையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... சென்னையில் எப்படி?

Heavy Rain in Tamil Nadu : 23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி கையாடல்.. ஊழியரை அறையில் அடைத்து சித்ரவதை

ஏ.டி.எம். பணம் நிரப்பும் நிறுவனத்தில், ரூ.1 கோடியே 50 லட்சம் வரை கையாடல் செய்த ஊழியர்களை, நிறுவன மேலாளர்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

3 ரவுண்டு போலீஸ் துப்பாக்கி சூடு.. பிரபல ரவுடி ஆல்வின் மீது குண்டு பாய்ந்து படுகாயம்

பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டதில், இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்.. வைத்திலிங்கம் மீது பாய்ந்தது லஞ்ச வழக்கு

27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

#JUSTIN : தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

குளுகுளு ஊட்டியாக மாறிய சென்னை.. கொட்டித் தீர்க்கும் மழை.. மக்கள் மகிழ்ச்சி!

கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது.

John Marshall : ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

John Marshall : நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வரலாற்றை மாற்றி வடிவமைத்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Gold Price Hike in Chennei: "போச்சு அவ்வளவுதான்.." தங்கம் விலை திடீர் உயர்வு | 22K Gold Price Update

Gold Price Hike in Chennei:மூன்று நாட்களுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.

தமிழ்நாட்டில் அனல் பறக்கப்போகுதாம்... வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் மக்களே!

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கோவையில் 57 ஸ்பாக்கள் மூடல்

கோவை மாநகர பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக 57 மசாஜ் செண்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் கடந்த 5 நாட்களில் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிந்து சமவெளி கண்டுபிடிப்பின் 100ம் ஆண்டு.. சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சிந்துவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த சர் ஜான் மார்ஷலுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

4 நாட்கள் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது: முக்கிய அறிவிப்பு

பல்வேறு மண்டலங்களின் அதிகாரிகளும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

''வங்கதேச சிறுபான்மையின இந்துக்கள் மீது இன அழிப்பு நடக்கிறது'' - அர்ஜுன் சம்பத் கடும் குற்றச்சாட்டு

''வங்கதேச சிறுபான்மையின இந்துக்கள் மீது இன அழிப்பு நடக்கிறது'' - அர்ஜுன் சம்பத் கடும் குற்றச்சாட்டு

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வக்ஃப் வாரியத்திற்கு புதிய தலைவர் தேர்வு.. உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்ப்ப கால மலச்சிக்கலைப் போக்குவது எப்படி? 

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை எப்படிப் போக்குவது என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழ் ஆசிரியர்களுக்கு எதற்கு இந்தி, சமஸ்கிருதம்?.. திணிப்பது அப்பட்டமாக தெரிகிறது.. சு.வெ. காட்டம்

S. Venkatesan About Hindi Sanskrit Language : தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடனுக்காக வழிப்பறி கொள்ளையில் இறங்கிய போலீஸ்.. சிக்கிய அதிமுக நிர்வாகியின் மகன்

13 லட்ச ரூபாய் கடனுக்காக, ஹவாலா பணம் எடுத்து வருபவரை நோட்டமிட்டு நண்பனோடு சேர்ந்து வழிப்பறியில் ஈடுப்பட்ட முதல்நிலை காவலரையும், அதிமுக நிர்வாகியின் மகனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#JUSTIN : TNPSC Group - 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - EPS வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு மூலம் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் வெறும் 6,244 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளது . குரூப்-4 தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்