K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தென்காசியில் தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் குளிக்க தடை!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை பெய்துவரும் நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பொருட்கள் – சுங்கத்துறை விசாரணை

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில், கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் இருந்து, ரூ.1.3 கோடி மதிப்புடைய, தங்கம், தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ட்ரோன்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், நட்சத்திர ஆமைகள் ஆகியவற்றை, சுங்கத்துறை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் காலமானார்!

Tamil Nadu Chief Qazi Salahuddin Mohammed Ayub Sahib | தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் காலமானார் | passes away

வெள்ளையும் இல்ல..காவியும் இல்ல.. எடப்பாடி விமர்சனத்திற்கு முதல்வர் பதில்!

முதல்வரின் டெல்லி பயணம் குறித்து, எதிர்கட்சிதலைவர் எடப்பாடி தெரிவித்த கருத்துக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஆட்டத்தை காட்டும் தென்மேற்கு பருவமழை- தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை திட்டம்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 17 பேர் கைது!

மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழி சாலை விரிவாக்க திட்டத்திற்காக மரத்தை வெட்டுவதற்காக வந்த ஜே.சி.பி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நில அளவை செய்யாமல் மரத்தை வெட்டக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி ஆபாச வீடியோ: சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நடிகை கிரண்!

பிரபல நடிகை கிரண் போலி ஆபாச வீடியோ வெளியானது குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு.. காவல்துறை விசாரணை!

மதுரையில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியின்போது மின்சார வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் நாகரிகம் திருக்குறள் - கவிஞர் வைரமுத்து

தமிழர்களின் நாகரிகம் எது என்று கேட்டால் திருக்குறள் என கூறுங்கள் தந்தை திருவள்ளுவர் ஞான தந்தை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.