K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

அம்பேத்கரை அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து போராட்டம்- செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில் அமித்ஷா, அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசிய நிலையில் விமானநிலையத்தில் கருப்புக்கொடி காட்ட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு..? விஜய் போடும் மாஸ்டர் பிளான்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பிப்ரவரி 2-ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை.. 15 நாட்கள் நடைபெறவுள்ளதாக மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள 133 வட்டாரங்கள் 27 நகர்பகுதிகளில் உள்ள 50 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் உள்ள 2 கோடி பேருக்கு வரும் 13-ஆம் தேதி முதல் முதல் 28-ஆம் தேதி வரை 15 நாட்கள் வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அதிர வைத்த ஈசிஆர் சம்பவம்.. தாம்பரத்தில் கார்கள் பறிமுதல்

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை துரத்தி சென்ற திமுக கொடி பொருந்திய இரண்டு கார்களை தாம்பரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டங்ஸ்டன் ஏலம் ரத்து..  கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விவசாயிகள் வழங்கிய காய்கறி சீர்வரிசைகளை வாங்காமல் சென்றாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தவெக மாவட்ட செயலாளருக்கு தடபுடல் வரவேற்பு.. கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள்

புதிதாக நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு-விற்கு தவெக தொண்டர்கள் வரவேற்பளித்த நிலையில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை... சுற்றுசூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுசூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.. காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை...!

வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டியதால், அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத, அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மகா கும்பமேளா உயிரிழப்புகள்.. பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்- செல்வப்பெருந்தகை

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில் அந்நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.