K U M U D A M   N E W S
Promotional Banner

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம்.. நிலம் கையகப்படுத்தும் ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்,  சாதி அடிப்படையில் கோவிலை நிர்வகிப்பது  மத நடைமுறையும் அல்ல எனவும்  தெரிவித்துள்ளது.

சுற்றுலா வாகனங்கள் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் - தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்த நீதிபதியே தான் மீண்டும் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கான பிரத்யேகமாக உள்ள நீதிபதியே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

தனியார் வங்கி மிரட்டல் - RBI-க்கு உயர்நீதிமன்றம் ஆணை

கொரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sivaji Ganesan's house seized; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Bad girl திரைப்பட சர்ச்சை... தணிக்கை சான்றிதழ் விண்ணப்பம் வரவில்லை..!

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என மத்திய அரசின் சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகளை மீறினால் கைது சீமானுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

காவல்துறை சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறவிருந்த போரட்டத்திற்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீரப்பன் உறவினர் மரணம்.. இழப்பீடு வழங்க மறுத்த உயர்நீதிமன்றம்..!

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் காவல்துறையினர் சித்ரவதை காரணமாக தான் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் இழப்பீடு கோரிய மனுவை பரிசீலுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம்... காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகும் வேலை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுழற்சி முறையில் பல்கலைக்கழக துறைத்தலைவர் நியமனம்.. நீதிமன்றம் உத்தரவு

சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம், தகுதி, திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமனம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில் நிலம் குத்தகை வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

காலி பணியிடங்கள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்ப உத்தரவு.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதத்தில் நிரப்ப வேண்டும்- நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Gold Rate Today : நடுங்க வைக்கும் தங்கம் விலை... இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,360க்கு விற்பனை

ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி மனு.., உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த வழக்கு இன்று வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால் வழக்குப் பதிவு - சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கமா? இல்லயா? என்பது விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தது - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.