உச்சம் தொட்ட மல்லிகை விலை எவ்வளவு தெரியுமா?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்வு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்வு
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, ஆணையத் தலைவர் கடிதம் அனுப்பி 22 மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான 20 வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி மனு
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் பணிக்களுக்காக, சென்னை மாதவரம் எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்
உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
"வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா?"
வழக்குகளில், காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் பக்ரூதின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்
ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைனராக இருந்தாலும், கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.