K U M U D A M   N E W S
Promotional Banner

Murugan Maanadu 2024 : திமுகவை படுத்தும் முருகன் மாநாடு.. எதிர்க்கும் கூட்டணி கட்சிகள்..

Murugan Maanadu 2024 : தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு, கூட்டணி கட்சிக்குள்ளாகவே வலுத்துள்ள எதிர்ப்பு திமுகவிற்கு குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 24-08-2024 | Kumudam News 24x7

Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 24-08-2024 | Kumudam News 24x7

Katchatheevu Issue : மீனவர்களுக்கு தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

Katchatheevu Issue : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Annamalai : முக்கியப் புள்ளிகளை காப்பாற்ற சிவராமன் கொலையா?.. கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் அண்ணாமலை சந்தேகம்

Annamalai on Sivaraman Death in Krishnagiri : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், எலி மருந்து உண்டு உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் சாலை விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Special Buses : கிருஷ்ண ஜெயந்திக்கு ஊருக்கு போறீங்களா?.. 985 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

Krishna Jayanti 2024 Special Buses : சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் 70 பேருந்துகளும், இதே தேதிகளில் மாதவரத்தில் இருந்து மேற்கூறிய இடங்களுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivaraman Death : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. முக்கிய குற்றவாளி மரணம்..

NTK Sivaraman Death : போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மரணமடைந்து உள்ளார்.

Medical Student Death: உச்சநீதிமன்ற வேண்டுகோளை ஏற்று மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!

''எங்களுக்கும் மருத்துவர்கள் மீது அக்கறை உள்ளது. மருத்துவ மாணவி படுகொலையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: விசிக பிரமுகரிடம் விசாரணை.. மேலும் 3 பேர் கைதால் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் தொடரும் சோகம்.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்..

சிறுமுகை அரசு பள்ளியில் 7, 8, 9ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள்..

தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையா தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு.. நரிக்குறவர்கள் மீது காவலர்கள் சரமாரி தாக்குதல்..

சென்னையில் நரிக் குறவர் இன மக்களை போலீஸார் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளுக்கு குட் நியூஸ்.. சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் ரயில் சேவை சீரானது!

தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவ மாணவி படுகொலை: வலுக்கும் போராட்டம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!

மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

Free Electricity: இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.. என்ன காரணம்?

ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் வாரிய விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்மைத் துறை கள ஆய்வு அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தலித் சமூகத்தினர் முதல்வராக முடியாதா? - திருமாவளவனின் கருத்தால் எழுந்த சூடான விவாதம்

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை என்று திருமாவளவனின் கருத்தால் சூடான விவாதங்கள் எழுந்துள்ளன.

Rameshwaram Fishermen Release : இலங்கை சிறைலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை! சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

Rameshwaram Fishermen Released From Sri Lankan Prison : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 13 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

"யாரையாவது அடித்தால் போலீஸ் வருவாங்க.. போலீஸை அடித்தால் யாரும் வருவதில்லை.." - காவலர் குமுறல்

தமிழக காவல்துறையில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் காவலர்களுக்காக கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற காவலர் வேதனையோடு வீடியோ வெளியிட்டுள்ளார்.

வைரல் காணொளி; கேமராவில் சிக்கிய சில்மிஷ மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பறைக்குள்ளே வைத்து முத்தமிட்டுக்கொள்ளும் காணொளி இணையவாசிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்..

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

Breaking: சென்னை மாநகர பேருந்தில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் அராஜகம்... சுத்துப் போட்ட போலீஸார்!

சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விருத்தாசலம் விவசாயிகள் கவலை

விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விருத்தாசலம் விவசாயிகள் கவலை

விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

Vaiko Speech : கிரிக்கெட்டில் தோல்வி.. 4 மீனவர்களின் தலையை வெட்டிய இலங்கை கடற்படை.. கொதித்த வைகோ

Vaiko Speech at Rajya Sabha : 85 தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்திய அரசு, தமிழக மீனவர்கள் இப்படிக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.