ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி!
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி என கடந்த உலகக் கோப்பையை விட 4 மடங்கு அதிகமாகப் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இளமைத் தேசிய கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியைச் சேர்ந்தவுமான யஷ் தயால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற புதிய சாதனயை படைத்துள்ளார்.
மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், 19 சிக்ஸர்களை விளாசி கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.
பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன் என விராட் கோலி உருக்கம்
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒட்டுமொத்த அணியும் ரிட்டயர்டு அவுட் முறையில் ஆட்டத்தை முடித்துக்கொண்டுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோஷித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில், வைரலானதைத் தொடர்ந்து, இப்போது இந்தப் பாடல், பல கிரிக்கெட் அடிப்படையிலான ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்சி சதம் அடித்து அசத்தியுள்ளார்
ஆர்பிசி அணி சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக டாஸ் தோற்றுள்ளது.
பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமான செயல் என கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளதால் ஹைதராபாத் அணி உடனான போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் - நடிகை சாகரிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஃபடேஸின் கான் என பெயரிட்டுள்ளனர்
வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், பாஜகவில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்
ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.