பாங்காக்கில் உள்ள டெர்த்தாய் கிரிக்கெட் மைதானத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை ஆசிய பிராந்திய தகுதிச் சுற்றில் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் குவித்திருந்த நிலையில்,யாரும் எதிர்பாராத வகையில் 10 பேட்ஸ்வுமன்களும் ரிட்டயர்டு அவுட் என தனது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி.
வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் (20 மற்றும் 50 ஓவர் போட்டிகள்) டிக்ளேர் செய்ய அனுமதி இல்லாததால், பேட்ஸ்வுமன்கள் ஒவ்வொருவராக மைதானத்திற்குள் ஓடி வந்து தாங்கள் ரிட்டயர்டு அவுட் என அறிவித்தனர். இதுப்போன்ற சம்பவம் நடைப்பெறுவது ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் இது தான் முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறியது ஏன்?
இப்போட்டியின் பிற்பாதியில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப வானமும் மேகமூட்டத்துடன் இருந்ததால், போட்டியை விரைந்து முடிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 16-வது ஓவரின் முடிவில், ஏற்கனவே நல்ல ஸ்கோர் பெற்றிருந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் சர்வதேச ஆல்ரவுண்டருமான அகமது ராசா இன்னிங்ஸை முடிக்க வீரர்களுக்கு உத்தரவிட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஈஷா ஓசா மற்றும் தீர்த்தா சதீஷ் இணை 16 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் குவித்தது. ஓசா 55 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்கள் எடுத்தார், தீர்த்தா 42 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். மீதமுள்ள எட்டு வீரர்களும், ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினர்.
29 ரன்களுக்கு சுருண்ட கத்தார் அணி:
இதனை சற்று எதிர்பார்க்காத கத்தார் அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது. ஆனால், கத்தார் அணியோ 11.1 ஓவர்களில் 29 ரன்களுக்கு சுருண்டது. மூன்று பேட்ஸ்வுமன்கள் மட்டுமே ரன்கள் அடிக்க முடிந்தது. மீதமுள்ள 7 வீரர்களும் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். கத்தார் அணியின் தொடக்க வீரங்கனை பானோ இம்மானுவேல் மட்டும் 29 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் அணிக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 15 டக் அவுட்கள். பெண்கள் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக டக் அவுட்டாகிய வீராங்கனைகள் என வரலாற்றில் இடம்பிடித்துள்ளது இப்போட்டி. 2025 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்று போட்டியினாது தாய்லாந்தில் நடக்கிறது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி, 2026 ஆம் ஆண்டு நடைப்பெறும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.