திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.
வருகிற 26ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீரா ராஜா வீரா பாடல் பதிப்புரிமை வழக்கில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
தாக்குதல் வழக்கில் அக்டோபர் 27-ம் தேதி நடிகர் உன்னி முகுந்தன் ஆஜராக சம்மன்
அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி (பொறுப்பு) செந்தில்குமார் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு
சீர்காழி மருத்துவமனையில் நடுக்கம் ஏற்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.
டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றத்தின் தலையீடு குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்கு?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்து, தனது பயணத்தை விமர்சித்தவர்களுக்குக் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.
தமிழக காவல்துறையின் பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.
கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்குத் தடை கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தெருநாய்களை பிடித்துக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைப்பு
இபிஎஸ்க்கு எதிராக வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது
ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக, சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாகச் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிங்கு சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.