K U M U D A M   N E W S

துரத்தும் வழக்கு...நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி.,கதிர் ஆனந்த்

2019 தேர்தல் சமயத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்.. பொன்முடி-செந்தில் பாலாஜி விடுவிப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை

பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சூளுரைத்தார்.

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

மதுரையில் பிரசிதிப்பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில், மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு!

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதால், நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தண்டனைகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் என்று செய்திகள் வெளிவருகின்றன.

ஓய்வூதியத்தை உயர்த்திய அரசு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர், சட்டமன்றம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வூதியம் உயர்வு,

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மீதான வழக்கு...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமீறில் தொடர்பாக திமுக எம்.பி, அதிமுக முன்னாள் எம்.பி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீதான போக்சோ வழக்கில் சந்தேகம்...ஆட்சியரிடம் மனு

ஜான் ஜெபராஜ் மீது போடப்பட்டுள்ள போக்சோ வழக்கில் சந்தேகம் உள்ளதாகவும், அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு.. நேரில் ஆஜராக விலக்கு!

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...தலையிட்ட நீதிமன்றம்...முடிவுக்கு வந்த 15 நாள் போராட்டம்

15 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

தமிழ் மொழியை கட்டாயமாக்க புதிய சட்ட இயற்ற வேண்டும் - ஜி.கே. மணி கோரிக்கை

தமிழ் மொழியை கட்டாய மொழியாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையெனில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவர் கோ.க. மணி வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் விடுவிப்பு ரத்து.. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

400 முறை தோப்புக்கரணம்... ஆசிரியைக்கு 2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்!

வீட்டுப்பாடம் செய்து வராததால் 400 முறை தோப்புக்கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் தொடர்பான சொத்துகுவிப்பு வழக்கு.. 6 மாதத்திற்கு விசாரணையை முடிக்க உத்தரவு!

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலி மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதகளில் துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என்.எல்.சிக்கு எதிராக போராட்டம்...அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து

என்.எல்.சி.-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் அதிகாரிகளை கேடயமாக பயன்படுத்திய தமிழக அரசு.. நீதிபதிகள் அதிருப்தி

டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க தமிழக அரசு முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

’தலீவரே தலீவரே தலீவரே..காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் விஜய்? நிதி பற்றாகுறையில் தவிக்கும் தவெக?

தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளுக்காக செலவு செய்ய தயங்குவதால், அக்கட்சி நிதி பற்றாகுறையில் தவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

மீனாட்சி அம்மன் கோயில்: ரூ.1 கோடிக்கு மேல் மின்கட்டணம் பாக்கி.. சித்திரை திருவிழா நடக்குமா?

மதுரையில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர்கள் பணி.. தேர்வு பட்டியல் ரத்து.. நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களில் வெளியிட வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு.. முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விபரீதம்...கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது

தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

நவாஸ்கனி எம்.பி வழக்கு – நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.