K U M U D A M   N E W S
Promotional Banner

Death

விசாரணை கைதி மரணம் - டிஎஸ்பி தலைமறைவு?

புதுக்கோட்டையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து மாவட்ட டிஎஸ்பி தலைமறைவு எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்.. அலட்சியமாக செயல்படும் அரசு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சியின்றி நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.

புன் சிரிப்போடு நின்ற இளைஞரின் கடைசி மூச்சு - மண மேடையிலேயே நடந்த சோகம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திய நபர்.. 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

காரில் பிரேக்கிற்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடியில் இருந்து தவறி விழுந்து பிரபல நடன கலைஞர் உயிரிழப்பு.. காரணம் இதுதான்

பிரபல பாலே (Ballet) நடன கலைஞர் விளாடிமிர் ஷ்கிலியாரோவ் உயிரிழந்த சம்பவம் கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்..? - அதிகரித்த உயிரிழப்பு.. என்ன நடக்கிறது..?

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. கலவரத்தை அடுத்து, இம்பால் உள்பட 5 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது.

பெண் உயிரிழப்பில் மர்மம்.. திருப்பத்தூரை உலுக்கிய கொடூரம் - என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், கணவரும், மாமியாரும் அவரை அடித்துக் கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கரை ஒதுங்கிய டால்பின்.. ஷாக் ஆன நொச்சிக்குப்பம் மக்கள்

சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடற்கரையில் இறந்த நிலையில் கிடக்கும் டால்பின் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தாய்-குழந்தைக்கு நேர்ந்த சோகம்... டாக்டருக்கு பேரிடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில், தாய்-சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பணியிலிருந்த டாக்டர் சியாமளா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எலி மருந்தால் விபரீதம்.. குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலை நிலவரம்.. வெளிவந்த முக்கிய தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலி மருந்தால் பறிபோன குழந்தைகள் உயிர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

அநியாயமா கொன்னுட்டாங்க..கதறும் உறவினர்கள்! கிண்டி மருத்துவமனையில் மீண்டும் பரபரப்பு

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயிற்று வலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Vignesh Death: மருத்துவரின் அலட்சியம்.. வயிற்று வலியால் பிரிந்த உயிர்.. கதறி அழுத அண்ணன்

சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் நோயாளி உயிரிழந்ததாக கூறி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலி மருந்தால் ஏற்பட்ட சோகம்.. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எலி மருந்தால் வந்த வினை.. பறிபோன 2 உயிர்.. என்ன நடந்தது?

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரசவத்தில் விபரீதம்.. தாயை தொடர்ந்து குழந்தைக்கும் நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். தாய் துர்கா தேவி உயிரிழந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் உயிரிழந்துள்ளார்.

பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - வீதியில் அழுது போராடும் உறவினர்கள்

தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரபல தென் கொரிய நடிகர் மரணம்.. அடுக்குமாடி குடியிருப்பில் சடலம் மீட்பு

பிரபல தென் கொரிய நடிகர் சாங் ஜே ரிம் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

"அவங்க இல்லமா வேலை நடக்காது" அரசு மருத்துவமனையின் அவலநிலை..

அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் டெல்லி கணேஷ் மரணம் - திருமாவளவன் நேரில் இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷின் மறைவிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் இரங்கல் தெரிவித்தார்.

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - முதலமைச்சர் இரங்கல்

குணச்சித்தர நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

3 நண்பர்கள் ஒரே நேரத்தில்... காவேரி கரையில் கதறி அழும் மக்கள்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நகப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.

வினையான விளையாட்டு.. திருப்பத்தூரில் அரங்கேறிய சோகம்

குழந்தையை காரில் அமர்த்தி தந்தை விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த நிலையில் கார் மோதிய விபத்தில், படுகாயமடைந்த குழந்தையின் தாத்தா முத்து சிகிச்சை பலன்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு திரளானோர் அஞ்சலி

தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மகா கலைஞன் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

80 வயதான பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்தார்.